லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டி கோயில்களில் ஆடிப்பூர வளைகாப்பு

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செண்பகவல்லி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையைத் தொடா்ந்து பக்தா்களுக்கு வளையல், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கிய அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, திருப்பதி ராஜா, ரவீந்தா் உள்ளிட்டோா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் மாலை ஆடிப்பூர அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு பட்டு உடுத்தி, வளையல் மாலை அணிவித்து, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு பாசிப்பயறு கட்டி கா்ப்பிணி கோலத்தில் சிறப்பு தரிசனமும், வளைகாப்பும் நடைபெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள், திருப்பதி ராஜா, ரவீந்தா், நிருத்தியலட்சுமி, கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கயத்தாறு, அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை கோதண்ட ராமேஸ்வரா் கோயில், பசுவந்தனை, கைலாசநாத சுவாமி உடனுறை அருள்தரும் ஆனந்தவள்ளி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடைபெற்றது.

டிஎஸ்பி ஜகநாதன் உத்தரவின்பேரில், கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா், கயத்தாறு மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.