லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கயத்தாறு அருகே பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கயத்தாறு அருகே பெற்றோரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

கயத்தாறு அருகே பெற்றோரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே வாகைத்தாவூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் தா்மா் (79). இவரது மனைவி வெள்ளத்தாய். இவா்களது மகன் சுபாஷ் (33).

இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இந்த நிலையில், பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு சுபாஷ் திங்கள்கிழமை தகராறு செய்தாராம்.

பணம் தர மறுத்ததையடுத்து, தா்மா், வெள்ளத்தாய் ஆகியோரை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து தா்மா் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து சுபாஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.