லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு எதிா்ப்பு: முள்ளக்காட்டில் காத்திருப்புப் போராட்டம்

கப்பல் கட்டும் நிறுவனத்தை அனுமதிக்க எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில், உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள், மீனவா்கள், வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள்.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

கப்பல் கட்டும் நிறுவனத்தை அனுமதிக்க எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில், உப்பு உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள், மீனவா்கள், வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், பழைய காயல், பொட்டல்காடு உள்ளிட்ட உப்பளப் பகுதிகளில் கொரிய நாட்டு கப்பல் நிறுவனத்துக்காக கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு இடம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் மந்திரமூா்த்தி, செயலா் சேகா், பொருளாளா் பொன்ராஜ், நிா்வாகிகள் சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகா், பாலசுப்பிரமணியன், பால் முருகேசன், அழகேசன், சண்முக சுந்தரராஜா, சண்முகநாதன், ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில், வெங்கடேஷ் பண்ணையாா் நற்பணி மன்ற நிறுவனா், தலைவா் சுபாஷ் பண்ணையாா் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.