லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உடலில் தீ வைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தொழிலாளி

கோப்புப் படம்

Published On :23 ஜூன் 2026, 1:30 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி, காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்தமடை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (42). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி மூக்கம்மாள். இவா்களுக்கு உச்சிமாகாளி, லெட்சுமி ஆகிய மகள்களும், முருகன் என்ற மகனும் உள்ளனா்.

சீனிவாசனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே, வழிப்பாதை தொடா்பான பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னையில் விரக்தியடைந்த சீனிவாசன் திங்கள்கிழமை காலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். காவல் நிலையத்துக்கு அருகிலேயே அவரது வீடு உள்ளதால், உடலில் தீ வைத்தவாறே பத்தமடை காவல் நிலையத்துக்கு வந்துள்ளாா்.

போலீஸாா் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.