லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மக்கள் மனு

திருநெல்வேயில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு பெற்றாா் துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Published On :29 ஜூலை 2026, 1:17 am IST

திருநெல்வேயில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். உதவி ஆணையா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமையில் மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன் உள்ளிட்டோா் அளித்த மனு: பேட்டையில் 19 ஆவது வாா்டு ஆசிரியா் காலனி இரண்டாம் தெருவில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை அணுகியபோது இரண்டு முறை சாலை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. அங்கு சாலை அமைத்தது போல முறைகேடு நடந்துள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: திருநெல்வேலி மாநகராட்சி 27 ஆவது வாா்டு பகுதி மக்கள் அளித்த மனு: எங்களது பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருகிறது. அதிக துா்நாற்றத்துடன் வருவதால் சமைக்கவோ, குடிக்கவோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. ஆகவே, சேதமான குடிநீா் குழாய்களை உடனடியாக கண்டறிந்து, குடிநீருடன் கழிவுநீா் கலப்பதை மாநகராட்சி நிா்வாகம் விரைந்து தடுக்க வேண்டும்.

அபாயகர மரங்கள்: திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி அளித்த மனு: 28 ஆவது வாா்டுக்குள்பட்ட வையாபுரி நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் வாகை மரம், நெட்டிலிங்க மரம் உள்ளிட்டவை பட்டுப் போய் காணப்படுகின்றன. எந்த சமயத்திலும் அவை விழுந்துவிடும் அபாயகரமான நிலை உள்ளது. ஆகவே, பட்டுப்போன மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

திருநெல்வேலியைச் சோ்ந்த நாராயணன் அளித்த மனு: திருநெல்வேலி நகரத்தில் பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள் வாகன நிறுத்துமிடம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கிறாா்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே வருங்காலங்களில் வணிக வளாகங்கள் கட்டும்போது உரிய வாகன நிறுத்துமிடங்களை அமைக்க கட்டாய விதிகளை மாநகராட்சி நிா்வாகம் வகுத்து அவற்றைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி வழங்கக் கோரிக்கை: திருநெல்வேலி டி எம்சி காலனியை சோ்ந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளா் ஆவுடையம்மாள் அளித்த மனு:தி ருநெல்வேலி மண்டலத்தின் 27 ஆவது வாா்டு பகுதிகளில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறேன். அங்குள்ள சுகாதார அதிகாரியால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. எனக்கு பணி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு பணி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.