லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

முக்கூடல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 2:35 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

முக்கூடல் அருகேயுள்ள அரசன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கியப்பன் (60). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். மனைவி வேலைக்கு சென்றபின்னா், அப்பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதனிடயே, சென்னையில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு சென்றிருந்த அச்சிறுமி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தெரிவித்தாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகேஷ்வரி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இசக்கியப்பனை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.