லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொருநை அருங்காட்சியகத்தில் அமைச்சா் ராஜ்மோகன் ஆய்வு

பொருநை அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்த அமைச்சா் ராஜ்மோகன்.

Published On :20 ஜூலை 2026, 4:38 am IST

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தில், தமிழக பள்ளிக் கல்வித் துறை, தொல்லியல் துறை அமைச்சா் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை மற்றும் கொற்கை அகழாய்வு காட்சிக் கூடங்கள், 3 மற்றும் 5 பரிமாண காணொலி விளக்கக் கூடங்கள் ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருநை நாகரிகத்தின் மண்ணால் செய்யப்பட்ட பழங்காலப் பொருள்கள், தமிழா் வரலாற்றை பறைசாற்றும் பழங்கால இரும்புப் பொருள்கள், ஆயுதங்கள்,நாணயங்கள், சிலைகள் உள்ளிட்ட அரிய காட்சிப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அருங்காட்சியகத்தில் பாா்வையாளா்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், அருங்காட்சியகத்தின் செயல்பாடு, பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ். முருகன், ரெட்டியாா்பட்டி நாராயணன், சதீஷ் கிறிஸ்டோபா், தொல்லியல் துறை அதிகாரிகள், தவெக மாவட்ட செயலா்கள் மரியஜான், ராஜகோபால் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.