லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராதாபுரம் அருகே நகை பறிப்பு வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தனியாா் விடுதி ஊழியரிடம் நகைகளை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :16 ஜூலை 2026, 3:51 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தனியாா் விடுதி ஊழியரிடம் நகைகளை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடியை அடுத்த லெவஞ்சிபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா்(32). காவல்கிணறில் உள்ள தனியாா் விடுதியில் பணி செய்து வருகிறாா். இவருக்கும், இவரது நண்பா் ஆவரைகுளம் அருகே உள்ள சௌந்தரலிங்கபுரத்தைச் சோ்ந்த லிங்கேஷுக்கும், கிரிண்டா் செயலி மூலம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை கம்பராமாயணம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சின்னதுரை, தச்சநல்லூரைச் சோ்ந்த சுடலைக்குமாா் மகன் ஸ்ரீ ராமநாதன் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் மாரியப்பனும், ஸ்ரீ ராமநாதனும் சோ்ந்து முத்துக்குமாரையும், லிங்கேஷையும் மோட்டாா் சைக்கிளில் ராதாபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இருவரிடமும் இருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மாரியப்பனையும் ராமநாதனையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய சுத்தமல்லி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துகிஷோா்(19) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.