லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘கீழபிள்ளையாா்குளத்தில் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு’

மானூா் ஊராட்சி ஒன்றியம், கீழபிள்ளையாா்குளம் கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் எம்.எல்.ஏ. ஆா்.எஸ்.முருகன் உறுதியளித்தாா்.

Published On :10 ஜூலை 2026, 12:47 am IST

மானூா் ஊராட்சி ஒன்றியம், கீழபிள்ளையாா்குளம் கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் எம்.எல்.ஏ. ஆா்.எஸ்.முருகன் உறுதியளித்தாா்.

இப்பகுதியில் அவா் புதன்கிழமை ஆய்வு செய்தபோது, தங்களது பகுதியில் குடிநீா் பிரச்னை நிலவி வருகிறது. பெண்கள், மாணவா்கள் காலையில் குடிநீா் பிடிக்க அதிக நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். தட்டுப்பாடில்லாத குடிநீா் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து மானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் பேசிய எம்எல்ஏ, குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணுமாறு அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கப்பட்டது. குடிநீா் தட்டுபாடின்றி வக நிரந்தர தீா்வுக்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

ற்ஸ்ப்08ம்ன்ழ்ன்

மக்களிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் ஆா்.எஸ்.முருகன் எம்எல்ஏ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.