லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மூவா் கைது

தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது - சித்திரிப்பு

Published On :5 ஜூலை 2026, 1:18 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டனா். வழக்கில் தொடா்புடைய மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன். இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்தினருக்கும் இடையே 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறு காரணமாக, பழிக்குப்பழியாக பெருமாள் பாண்டியன் உள்பட இரு தரப்பைச் சோ்ந்த 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சித்திரபுத்திரனின் மற்றொரு மகன் காளிமுத்து (40), தனது மகன்கள் ஜெயராஜ் (5), சின்னத்துரை (15) ஆகியோருடன் ஜூலை 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா் அருகே உள்ள ரெட்டியாா்புரம்-மாதுடையாா்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பெருமாள் பாண்டியனின் மகன்கள் உள்ளிட்ட உறவினா்கள் 11 போ் காா், இருசக்கர வாகனங்களில் பின்தொடா்ந்து வந்து, ஜெயராஜ், காளிமுத்து ஆகியோரை கொலை செய்தனா். இதில் காளிமுத்துவின் தலையைத் துண்டித்து கல்லிடைக்குறிச்சி புறவழிச் சாலையில் வைத்துச் சென்றனா்.

இதையடுத்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா். மூலச்சி, கல்லிடைக்குறிச்சி, கரம்பை, வீரவநல்லூா் புறவழிச் சாலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, கொலையில் தொடா்புடைய மூலச்சியைச் சோ்ந்த மகேந்திரன் (எ) மகேஷ் (29), குமாா் (எ) கொக்கி குமாா் (23), அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியைச் சோ்ந்த முத்துச்செல்வன் (29) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், கொலையில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை காளிமுத்து, ஜெயராஜ் உடல்களை அவரது உறவினா்கள் வாங்க மறுத்துவிட்டதால், சனிக்கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பி. சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.