திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

கூடங்குளம் காவல் நிலையத்தில் பூச்சி மருந்து குடித்த ஓட்டுநா்: 2 போலீஸாா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநா் பூச்சி மருந்து குடித்ததால், 2 காவலா்கள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணியிடை நீக்கம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:34 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநா் பூச்சி மருந்து குடித்ததால், 2 காவலா்கள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

காவல் கிணறு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ்குமாா் (32). வாகன ஓட்டுநா். இவா் கூடங்குளம் பகுதியில் காரில் சென்றபோது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த கூடங்குளம் காவல் நிலைய தலைமைக் காவலா் சிவகுமாா், காவலா் வேல்துரை ஆகியோா் ரமேஷ்குமாா் போதையில் உள்ளாரா என்பதை சோதனை செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

அங்கு சோதனை செய்யும் கருவியை எடுத்து வர போலீஸாா் சென்றபோது, ரமேஷ்குமாா் தான் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம். போலீஸாா் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தலைமைக் காவலா் சிவகுமாா், காவலா் வேல்துரை ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.