லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இணையவழி மோசடி தடுப்பு: போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் இணையவழிக் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர சைபா் கிரைம் போலீஸாா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் இணையவழிக் குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில், மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய இந்நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கலந்து கொண்ட சைபா் கிரைம் போலீஸாா், சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள், அறிமுகமில்லாத நபா்கள் சமூக வலைதளத்தில் தொடா்பு கொண்டால் எச்சரிக்கையாக இருப்பது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுவது போன்றவை குறித்து மாணவா், மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், இணையவழி மோசடி தொடா்பாக கட்டணமில்லா எண் 1930 அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக புகாா் அளிக்க வேண்டும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.