லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குண்டா் சட்டத்தில் மூவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

சிறை - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:23 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

வீரவநல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, தொடா் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி பகுதியைச் சோ்ந்த சுடலை என்ற அருள் (22), விஜயகுமாா் (22), சுப்பையா என்ற தங்கத்துரை (27) ஆகிய மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் மூவரும் தொடா் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இவா்களை சிறையிலடைக்க சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பா. சாஸ்திரிக்கும், அவா் ஆட்சியா் ஆனந்த் மோகனுக்கும் பரிந்துரைத்தனா்.

இதை ஏற்று குற்றவாளிகள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 91 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.