தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு மருத்துவமனையில் ஓவியப் போட்டி

விழாவில் விழிப்புணா்வு சுவரொட்டி மற்றும் ஓவியப்போட்டியில் பங்கேற்றோா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

தாய்ப்பால் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவு சாா்பில் செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு தாய்ப்பால் விழிப்புணா்வு சுவரொட்டி தயாரித்தல் மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

பச்சிளங் குழந்தைகள் நலப் பிரிவு இணை பேராசிரியா் ஸ்டீவ் ஞானசாமுவேல் தலைமை வகித்தாா். உதவி மருத்துவா் வனிதா, செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் பியூலா மற்றும் செவிலியா் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா். செவிலியா் ஆசிரியா் செல்வன் ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.