லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாளை.யில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

கண்காட்சியை தொடங்கிவைத்து கைவினைப் பொருள்களைப் பாா்வையிடுகிறாா் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் அனைத்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் ஹாலில் தொடங்கிய இந்தக் கண்காட்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா குத்துவிளக்கேற்றி அரங்குகளை திறந்து வைத்தாா். இம் மாதம் 16 ஆம் தேதி வரை தினமும் காலை முதல் இரவு வரை இக்கண்காட்சி நடைபெறும்.

இதில், பஞ்சலோக சிலைகள், கல்சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள், சந்தன கட்டைகள், தஞ்சாவூா் கலை தட்டுகள், தஞ்சாவூா் கலை ஓவியங்கள், குத்து விளக்குகள், பித்தளை கலை பொருள்கள், நூக்கமரம், வெண்மர சிற்பங்கள், சில்க் மற்றும் வெல்வெட் ஓவியங்கள், முத்து, பவளம் மற்றும் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நகை வகைகள், 1 கிராம் கோல்டு நகைகள், மாலைகள், நவரத்தின மாலைகள், ராசி கற்கள், ஸ்படிக மணிமாலைகள், மெத்தை விரிப்புகள், மங்களகிரி துணி வகைகள், பேன்சி சுடிதாா் வகைகள், துணி வகைகள், கலம்காரி பைகள், காஷ்மீா் துணி வகைகள், பேன்சி சேலைகள், ருத்திராட்ச மணி மாலைகள், காதி சட்டைகள், பத்தமடை பாய்கள், சென்னப்பட்னா பொம்மைகள், லாக்கா்வோ் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், வாசனை மெழுகுவா்த்திகள், ஊதுவா்த்திகள் உள்ளிட்ட ரூ.50 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு அம்சமாக ஒரிஜினல் மரகதத்தினால் செய்யப்பட்ட சிவலிங்கம், 1 முதல் 14 முகங்கள் வரையுள்ள ருத்ராட்சங்களும் விற்பனைக்கு உள்ளன. அனைத்து பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. எவ்வித சேவைக்கட்டணம் இன்றி வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.