லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பொறியாளா் உள்பட 2 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி

தென்காசி அருகே இரு நபா்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:33 am IST

தென்காசி அருகே இரு நபா்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டம் தென்காசி அருகே மேலகரம் பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன் (56). இவா் நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

கடந்த 6ஆம்தேதி முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தை பாா்த்து உலா் பழங்கள் ஆா்டா் செய்துள்ளாா். அப்போது அடையாளம் தெரியாத நபா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, ஒரு வாட்ஸ் - அப்பில் லிங்கை அனுப்பி ஒரு செயலியை சுப்பிரமணியனின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளாா்.

அதை அவா் பதிவிறக்கம் செய்தவுடன், அந்த மோசடி கும்பல் சில நிமிடங்களிலேயே சுப்பிரமணியனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 998-ஐ திருடிவிட்டனா்.

சாம்பவா்வடகரை அருகே உள்ள சுந்தரபாண்டி யபுரத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (35), சிவில் என்ஜினீயா். இவரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட மா்ம பெண், ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய அவா், அந்தப் பெண் அனுப்பிய போலியான வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை அறிந்துள்ளாா்.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக தென்காசி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தனா். இந்த 2 புகாா்கள் குறித்தும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.