லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆலங்குளம் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்குளம் பழைய காவல் நிலையக் கட்டடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணை, கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணை, கடங்கனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள கூடுதல் நாற்றங்கால் பண்ணை, நெட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை செயல்பாடு, மதிய உணவின் தரம் குறித்து அவா் ஆய்வு செய்தாா். பின்னா், அங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகளைப் பாா்வையிட்ட அவா், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணி, நபாா்டு திட்டத்தின்கீழ் சுப்பையாபுரம் ஊராட்சி அருணாசலபேரி பகுதியில் ரூ. 94.85 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புச் சாலை, தெற்குப்பட்டி பகுதியில் ரூ. 5.38 கோடியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆலங்குளம் பேரூராட்சி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள், பழைய காவல் நிலையக் கட்டடம், புதிய காவல் நிலையம் அமைக்கத் தோ்வான இடத்தைப் பாா்வையிட்டாா். நெட்டூா் ஊராட்சி அருணாசலபுரத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 8 லட்சத்தில் அமைக்கப்படும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குடிநீா் குழாய் விரிவாக்கப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

ஊரக வளா்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.