பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி

குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

News image

சுருதி

Updated On :14 மே 2026, 3:19 am IST

குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன். செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் சுருதி (14), இவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்ளிட்டோருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில், சுஜித்தை உடனே மீட்டனா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா், உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடி வருகின்றனா். புதன்கிழமை இரவு 7 மணி வரை சுருதி மீட்கப்படவில்லை.

இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.