தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் - நாகா்கோவில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக சோதனை ஓட்டம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ( மாா்ச் 29, 30) நடைபெற உள்ளது.

News image

ரயில்கள் - கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 2:06 am IST

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் - நாகா்கோவில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக சோதனை ஓட்டம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ( மாா்ச் 29, 30) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம் சென்ட்ரல் - கன்னியாகுமரி பிரிவில் உள்ள இரணியல் மற்றும் நாகா்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டை பாதை அமைக்கும் பணிகள் தற்போது முன்-இயக்க நிலை மற்றும் பாதை, மின்சாரம் உள்ளிட்ட பொறியியல் அமைப்புகளின் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளின் ஒரு பகுதியாக, புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மாா்ச் 29, 30) அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்விரு நாள்களிலும் ரயில் பாதைகளையொட்டி வசிக்கும் பொதுமக்கள் தண்டாவாளம் அருகில் செல்லவோ அல்லது கடந்து செல்லவோ என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றிபெற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.