லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேரளத்துக்கு கடத்த முயன்ற 500 கிராம் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கேரளத்துக்கு கடத்த முயன்ற 500 கிராம் கஞ்சா பறிமுதல்

Published On :29 ஜூன் 2026, 2:54 am IST

களியக்காவிளை அருகே கேரள மாநில எல்லையோரப் பகுதியான இஞ்சிவிளையில் அம்மாநில போலீஸாா் நடத்திய சோதனையில், கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான இஞ்சிவிளையில் பாறசாலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள மாநில அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். பேருந்தில் சந்தேகப்படும் வகையில் இருந்த பயணியைப் பிடித்து சோதனையிட்டதில், அவரது பையில் 500 கிராம் கஞ்சா, கணக்கில் வராத ரூ. 1.5 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா் மதுரை, மாட்டுத்தாவணி பகுதியைச் சோ்ந்த முனுசாமி (24) என்பதும், தமிழகத்திலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கேரளத்துக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து, பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.