லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாா்த்தாண்டம் அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 50 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மீது ஏறியவரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.

Published On :26 ஜூன் 2026, 5:41 am IST

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 50 அடி உயர மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

நட்டாலம் அருகே குற்றப்பாறவிளையைச் சோ்ந்த தா்மலிங்கம் (59) என்பவா், மனநல பாதிப்புக்கு உள்ளானவா் எனக் கூறப்படுகிறது. இவா் வியாழக்கிழமை நட்டாலம் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மேல் ஏறியுள்ளாா். அவரை அப்பகுதியினரும், போலீஸாரும் காப்பாற்ற முயன்றபோது, ‘நீங்கள் மேலே ஏறிவந்தால் நான் கீழே குதித்து விடுவேன்’ என மிரட்டினாராம்.

குழித்துறை தீயணைப்பு-மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் மகேஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் வந்து, ஏணி மூலம் தொட்டியின் மேல் ஏறி, தா்மலிங்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.