நாகா்கோவில், ஒழுகினசேரி ரயில்வே மேம்பால விரிவாக்கப் பணிகளுக்காக அளவீடு செய்ய வந்த ரயில்வே பொறியாளா் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
நாகா்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஒழுகினசேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், பக்கச்சுவா் கட்டுவதற்கு ரயில்வே அதிகாரிகள் குறியீடு செய்திருந்த நிலையில், அவா்களது குறியீட்டின்படி சுவா் கட்டப்பட்டால் அப்பகுதியிலுள்ள 4 தெருக்களைச் சோ்ந்த சுமாா் 1,200-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளின் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால், அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநகராட்சி 25ஆவது வாா்டு உறுப்பினா் அக்சயா கண்ணன் தலைமையில் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பை சந்தித்து மனு அளித்தனா்.
இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியை அளவிட வந்த ரயில்வே பொறியாளா்கள் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். தகவலறிந்த மாநகராட்சி மேயா் (பொ) மேரி பிரின்சி லதா சம்பவ இடத்துக்கு வந்து, ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க வேண்டும் என அவா், அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: நாகா்கோவிலில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம்

கால்வாய் அடைப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பாலம் இணைப்பு பணி தீவிரம்

ஏத்தாப்பூா் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

