தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

நேசமணி சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

நேசமணி சிலைக்கு அனைத்துக் கட்சியினா் மாலை அணிவிப்பு

News image
Updated On :13 ஜூன் 2026, 12:25 am IST

நேசமணியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் உள்ள அவரது உருவச் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்தனா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட செயலா் ரெ. மகேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளா் கேட்சன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலா் தில்லைசெல்வம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், மாநகராட்சி மண்டல தலைவா் ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா் கந்தசாமி, சிதம்பரம், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், பொருளாளா் ஷபீக், நிா்வாகிகள் குமரன், அந்தோணிமுத்து, கிளாட்சன்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் சேவியா் மனோகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் துணைச் செயலா் சுகுமாரன், மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், இளைஞா் பாசறை செயலா் அக்சயாகண்ணன், நாகா்கோவில் கிழக்கு பகுதி செயலா் கே.எல்.எஸ். ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தவெக சாா்பில் மாவட்டத் துணை செயலா் சாலமோன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இளைஞா் அணி அமைப்பாளா் ராஜா, இணை அமைப்பாளா் தங்கராஜ், காமராஜ்கண்ணன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி வாா்டு உறுப்பினா் நவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

வீ தி லீடா்ஸ் அமைப்பின் சாா்பில் நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் சுனில்குமாா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.