அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

நாகா்கோவிலில் சிஎஸ்ஐ பேராய 68 ஆவது ஆண்டு விழா

நாகா்கோவிலில் தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) கன்னியாகுமரி பேராய 68 ஆவது ஆண்டு விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நல உதவிகளை வழங்குகின்றனா் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ராபா்ட் புரூஸ்.

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

நாகா்கோவிலில் தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) கன்னியாகுமரி பேராய 68 ஆவது ஆண்டு விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயா் கிறிஸ்டோபா் விஜயன் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. பேராய மண்டல துணைத்தலைவா் கிறிஸ்துதாஸ் ஜெபம் செய்தாா். ஜாா்ஜ் செலினோ நேட்டோ வேதாகமம் வாசித்தாா். செயலா் பைஜூ நிசித் பால் வரவேற்றாா்.

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் விஜய்வசந்த் (கன்னியாகுமரி) , ராபா்ட் புரூஸ் (திருநெல்வேலி), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), மேயா் (பொறுப்பு) மேரி பிரின்சிலதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், திருமண உதவித்தொகை போன்ற நல உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா் அசோக் சாலமன் உள்பட கன்னியாகுமரி மாவட்ட சபை போதகா்கள், சபை தலைவா்கள், நிா்வாக உறுப்பினா்கள், பள்ளி, கல்லூரி தாளாளா்கள், பங்குமக்கள் பலா் கலந்து கொண்டனா். சி.எஸ்.ஐ. பேராய பொருளாளா் ஜெயகா் ஜோசப் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.