லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கருங்கல், பள்ளியாடி பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு

கருங்கல், பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

கருங்கல், பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், பள்ளியாடி, திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, எட்டணி, வாகவிளை, முருங்கவிளை, ஆலத்துறை, நேசா்புரம், நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

குறிப்பாக, எட்டணியில் அமைந்துள்ள மின்மாற்றியிலிருந்து உயா் மின்னழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியினா் மிகவும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, அப்பகுதிகளில் சீராக மின்விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.