லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவட்டாறு கோயிலில் திருடப்பட்ட நகைகள் இணை ஆணையரிடம் ஒப்படைக்க உத்தரவு

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகள் திருட்டு போய், பின்னா் மீட்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்

Published On :30 ஜூலை 2026, 4:49 am IST

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகள் திருட்டு போய், பின்னா் மீட்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்

பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகளை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம் இணை ஆணையரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இக்கோயில் பூஜாரி நாராயணன் நம்பூதிரி, 18.2.1995இல் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, அந்த நகைகளை மீட்டு பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதி மன்றத்தில் ஒப்படைத்தனா்.

தங்கநகைகளின் அப்போதைய மதிப்பு ரூ.90 லட்சம். வெள்ளி நகைகள் மற்றும் ஜாதி கற்களின் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். இந்த தங்க நகைகளை உரிமை கோர யாரும் முன் வராததால் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, குமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம் இணை ஆணையா், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில், நகைக்கு உரிமை கோரி வழக்கு தாக்கல் செய்தாா். உயா்நீதிமன்றம் உரிய வழிமுறைகள் பின்பற்றி மனு தாக்கல் செய்து நகைகளை பெற்றுக் கொள்ள உத்தரவிட்டது.

அதன்படி தங்க நகைகளை உரிமை கோரி சுசீந்திரம் இணை ஆணையா் பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை மாவட்ட அமா்வு நீதிபதி பரமசிவதாஸ் விசாரித்து , திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம் இணை ஆணையா் பெற்று கொள்ள புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.