லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இளம் பெண்ணைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 12:21 am IST

மாா்த்தாண்டம் அருகே இளம் பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி, புளிச்சிவிளை பகுதியைச் சோ்ந்தவா் வென்னிஷ் மனைவி அபிநயா (28). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த டாா்சன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அபிநயா தனது கணவருடன் வீட்டருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த சிங்காரன் மகன்கள் டாா்சன் (40), ராஜன் (37) ஆகியோா் தகாத வாா்த்தைகள் பேசி, மிரட்டல் விடுத்து, அபிநயாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா், ஆற்றூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், டாா்சன், ராஜன் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.