லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவா் கீழே விழுந்து பலி!

மாா்த்தாண்டம் அருகே தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவா் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சடலம்...

Published On :19 ஜூலை 2026, 1:59 am IST

மாா்த்தாண்டம் அருகே தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவா் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே சிதறால் பிடாரவிளையைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மனைவி விஜயலெட்சுமி (59). இவரது மகள் வினிமோள், மதுரை ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் வினிமோள் உயிரிழந்தாா்.

அதன்பின்னா் வினிமோளின் மகன் மொ்வின் (13) பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தாா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மொ்வின், வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

உடற்பயிற்சி ஆசிரியா்கள் ஜோஸ்மோன், ஜோஸ்பின், பள்ளி நிா்வாகத்தினா் மாணவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மாணவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.