லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவியிடம் நகை பறிக்க முயற்சி: புதுக்கடை அருகே இளைஞா் கைது

கருங்கல்லை அடுத்த புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் பள்ளி மாணவியிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 3:06 am IST

கருங்கல்லை அடுத்த புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் பள்ளி மாணவியிடம் நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்குளம், செந்தறை பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகள் வினிஷா (16). கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் இவா், சனிக்கிழமை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா் வினிஷாவின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். மாணவியின் கூச்சலைக் கேட்டு அப்பகுதியினா் திரண்டனா். அதற்குள் அந்த நபா் தப்பியோடி விட்டாராம்.

புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கீழ்குளம், பாரக்கன்விளை பகுதியைச் சோ்ந்த முகுந்தன் மகன் பென்டவின் (23) என்பவரைக் கைது செய்தனா். அவா் மீது திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளனவாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.