லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சின்னமுட்டம் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கக் கோரிக்கை

சின்னமுட்டம் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

கூட்டத்தில் பேசுகிறாா் திருத்தல பங்குத்தந்தை மைக்கேல் ஏஞ்சலோ

Published On :8 ஜூலை 2026, 12:27 am IST

சின்னமுட்டம் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி- சின்னமுட்டம் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விவாதிக்க, கன்னியாகுமரியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், ஊா் பங்கு மக்கள் தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை திரண்டனா்.

திருத்தல பங்குத்தந்தை மைக்கேல் ஏஞ்சலோ, பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், விசைப்படகு சங்கத் தலைவா் வெனிஸ், செயலா் நிக்சன், பொருளாளா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேரக் கட்டுப்பாட்டை மீறி மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.