லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சின்னமுட்டத்தில் மோதல்: 14 மீனவா்கள் மீது வழக்கு

சின்னமுட்டத்தில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்கு
Published On :8 ஜூலை 2026, 12:34 am IST

சின்னமுட்டத்தில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நேரக்கட்டுபாட்டை மீறி மீன்பிடிக்கச் சென்ாக, கன்னியாகுமரி, சின்ன முட்டம் மீனவா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கன்னியாகுமரி பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சின்னமுட்டத்தைச் சோ்ந்த சில்வெஸ்டா், கபிலன், அந்தோணி செபஸ்தியான், பெஸ்லி, பிரபு, ஆலிஸ், கபின் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அதேபோன்று சின்னமுட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரியைச் சோ்ந்த டாலன், வினிஸ், நிக்சன், ஜேக்கப், டிவோட்டா, மதன், மைக்கேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.