லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாராயணகுரு பிறந்தநாள்: குமரி மாவட்டத்துக்கு ஆக. 28இல் உள்ளூா் விடுமுறை

ஸ்ரீநாராயணகுருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக. 28 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி . - கோப்புப்படம்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

ஸ்ரீநாராயணகுருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக. 28 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீநாராயணகுருவின் பிறந்த நாளை (ஆவணி சதயம்) முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் ஆக. 28 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அந்த விடுமுறைக்கு ஈடாக, சனிக்கிழமை (செப். 12) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.