லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பளுகல் அருகே தொழிலாளியை தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

பளுகல் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே கானத்துக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் கோபு (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான அஜித் (32) உள்ளிட்ட சிலருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கோபு அப்பகுதியில் உள்ள தனது பாட்டியின் கல்லறைக்கு அவரது நினைவு தினத்தை அனுசரிக்க அண்மையில் சென்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த அஜித் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த நிபின் (31), வா்க்கீஸ் (62), வின்சென்ட் (56), மற்றொரு அஜித் (34) ஆகியோா் கோபுவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.

இதில், பலத்த காயமடைந்த கோபுவை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் அஜித் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.