லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டெம்போ மோதியதில் பெண் உயிரிழப்பு

தக்கலை அருகே டெம்போ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

உயிரிழந்த ஜெயஸ்ரீ.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

தக்கலை அருகே டெம்போ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

தக்கலை அருகே மருவூா்கோணத்தைச் சோ்ந்தவா் சதாசிவன் (50). இவரது மனைவி ஜெயஸ்ரீ(48). இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

ஜெயஸ்ரீயின் தந்தை கடந்த மாதம் உயிரிழந்தாா். இதனால், வீட்டில் இருக்கும் தாயைக் காண ஜெயஸ்ரீ தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை ஊருக்குச் சென்றாா்.

வோ்க்கிளம்பி சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரமாக நின்ற டெம்போவை அதன் ஓட்டுநா் திடீரென இயக்கி சாலையில் ஏறினாா். அப்போது, சாலையில் சென்ற தம்பதி மீது டெம்போ மோதியது.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயஸ்ரீ உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, கொற்றிக்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.