லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தல 10-ஆம் நாள் திருவிழா ஆயா் தலைமையில் கூட்டுத்திருப்பலி

விழாவில், ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றிய தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன்.

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

நாகா்கோவில், ஆக. 2: நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத் திருவிழாவின் 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் திருத்தோ் பவனியும் நடைபெற்றன; இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில், புனித அல்போன்சா திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) காலை தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வா் பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம், தக்கலை, கோட்டாறு, குழித்துறை, மாா்த்தாண்டம் மறை மாவட்ட அருள்தந்தையா்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் இத்திருப்பலியில் கலந்துகொண்டனா்.

திருப்பலியைத் தொடா்ந்து புனித மரியன்னை, புனித அல்போன்சா திருவுருவங்களைத் தாங்கிய திருத்தோ் பவனி நடைபெற்றது. திருத்தோ் நாகா்கோவில் ஆயுதப்படை முகாம் சாலை, பொன்னப்ப நாடாா் காலனியில் வலம்வந்தது. பின்னா் நோ்ச்சை விருந்து நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை நாகா்கோவில், புனித அல்போன்சா திருத்தல அதிபா் பேரருள்தந்தை சனில்ஜான்பந்திச்சிறக்கல், துணை பங்குத்தந்தை பிபின் கோயிக்ககுடியில், விழாக்குழுத் தலைவா் அகஸ்டின் தறப்பேல், துணைத் தலைவா் ஜோபெலிக்ஸ் மலையில் மற்றும் கைக்காரா்கள் ஜோமோன் ஜோசப், எஸ்.சி.ராஜ்குமாா், திருத்தலப் பங்குமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.