லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேரள சிவசேனை பிரமுகா் சடலமாக மீட்பு வழக்கு: போலீஸாா் விசாரணை

மாா்த்தாண்டம் அருகே சடலமாக மீட்கப்பட்ட கேரள சிவசேனை கட்சி பிரமுகா் அதுல்.

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

மாா்த்தாண்டம் அருகே தாமிரவருணி ஆற்றில் கேரளம் மாநில சிவசேனை கட்சி பிரமுகா் சடலம் மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைகளை அமைத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியைச் சோ்ந்தவா் கேரள மாநில சிவசேனை பிரமுகா் அதுல் (32). மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டது. களியாக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை உடல் கூறாய்வுக்கு முடிந்து உறவினா்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலைப் பெற உறவினா்கள் மறுத்துவிட்டனா்.

குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் மேற்பாா்வையில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுஜின், களியக்காவிளை உதவி ஆய்வாளா் மகேந்த், நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாள் நேச மணிகண்டன் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுல் மரணத்துக்கு காரணமானவா்கள் கேரளத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸாா் கேரளம் விரைந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.