லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சா் விஜய் பாலாஜி

ஜவுளித் துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கப்படும் என, கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சா் ம. விஜய் பாலாஜி.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

ஜவுளித் துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கப்படும் என, கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களின் கோரிக்கைகள் தொடா்பாகவும், ஜவுளித் துறை மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்தும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இதுதொடா்பாக பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்காக முதல் தவணையாக ரு. 300 கோடியை முதல்வா் அறிவித்துள்ளாா். மக்கள் கேட்டு வாங்கிக் கொள்ளும் அளவுக்கு இலவச வேட்டி, சேலைகள் தரமாக இருக்கும். ஜவுளித் துறையை உலகளாவிய தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.