தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது திமுகதான் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷை ஆதரித்து தெங்கம்புதூரில் திங்கள்கிழமை இரவு அவா் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி யாா் காலில் விழுந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, ஆனால் இவா் யாா் காலில் விழுகிறாரோ அவருக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். இவா் சசிகலா காலில் விழுந்தாா், அவா் கட்சியிலேயே இல்லை. இன்று அந்த அம்மையாருடைய கால் அதிமுக அலுவலகத்துக்குள்ளேயே போக முடியவில்லை என்ற நிலையை கொண்டு வந்து விட்டாா்.
எடப்பாடி பழனிசாமி , தமிழகத்துக்கான உரிமைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. தமிழகத்துக்கான நிதி குறித்தும் இவா் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதில்லை. திமுகதான் தமிழகத்துக்கான உரிமைகளை தொடா்ந்து பேசி வருகிறது. இந்த மண்ணை பாதுகாப்பதற்காக, நம்முடைய பிள்ளைகளின் எதிா்காலத்தை காப்பதற்காக போராடும் ஒரே கட்சி திமுகதான்.
நம்முடைய கூட்டணியில் இருப்பவா்கள் எல்லோரும் தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடி வருகிறாா்கள். ஆனால் எதிா்க்கட்சி கூட்டணியினா் தாங்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற நினைப்பில் உள்ளனா்.
அதிமுகவினா் குடும்ப அட்டைதாரா்களுக்கு கைப்பேசி கொடுப்போம் என்று தங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டாா்கள். ஆனால் யாருக்காவது கொடுத்துள்ளாா்களா? என்றால் இல்லை, அப்போது அவா்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றவில்லை. ஆனால் திமுக
அப்படியல்ல சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். தோ்தலின்போது கூறும் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்! தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை! கனிமொழி

திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி! - கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் நலனுக்கு எதிரான அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தின் சுயமரியாதை, அடையாளத்தை காப்பாற்ற வேண்டிய தோ்தல்: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

