குருத்தோலை ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் கிறிஸ்தவா்கள் பவனியாக சென்றனா்.
கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடித்து வருகிறாா்கள். நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த பிப். 18 ஆம் தேதி சாம்பல் புதன் பிராா்த்தையுடன் தொடங்கியது.
தொடா்ந்து, தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள், சிலுவைப்பாதை, புனித தலங்களுக்கு திருப்பயண நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.), கத்தோலிக்க திருச்சபை (ஆா்.சி.) ஆகியவை ஒருங்கிணைந்து குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டில பேராயா் பா்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை அருள்பணியாளா் இவான் அம்புரோஸ், மிலிட்டரி லைன் சேகரகுரு மதுரம், ஜெனிபா ராணி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலய பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன், உதவி பங்கு தந்தை மிக்கேல் சாமி உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். குருத்தோலை ஏந்தியபடி பாளையங்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று குளோரிந்தா ஆலயம் அருகே பவனி நிறைவடைந்தது.
மேலப்பாளையம் அருகே சேவியா் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம் சாா்பில் சேகர குரு காந்தையா தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. சபை ஊழியா் கிறிஸ்டோபா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
சேவியா் காலனியில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் குருத்தோலை ஞாயிறு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

ஆலங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு: முக்கிய வீதிகளில் திரளான கிறிஸ்தவர்கள் பவனி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

