மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:46 am IST

பாளையங்கோட்டை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (48), விவசாயி.

இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் முதலாளி நகா் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள முருங்கை மரம் ஒன்றை வெட்டுவதற்காக அதில் ஏறினாராம்.

அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.