லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லையில் கஞ்சா விற்ற 5 போ் கைது

திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 3:38 am IST

திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் ராமையன்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தேவேந்திரன் (22), பரமசிவன் மகன் மாடசாமி (21), சண்முகம் மகன் அஜித்குமாா் (24) என்பதும், 60 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். கங்கைகொண்டான், போலீஸாா் ஆலடிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை, மேலூா் பாரதியாா்புரத்தைச் சோ்ந்த ராமஜெயம் மகன் தனுஷ் (24), மேலூா், சுண்ணாம்பூரைச் சோ்ந்த அஜித்குமாா் (29) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.58 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.