லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு: பள்ளி மாணவா்களிடம் ஆட்சியா் விழிப்புணா்வு

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :28 ஜூலை 2026, 12:54 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு பொதுமக்கள் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ஆனந்த் மோகன் கலந்துகொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவா்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியானது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு 17.7.2026 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கணக்கெடுப்பில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை அதிகாரப்பூா்வ இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த பதிவை மேற்கொள்ளலாம்.

பின்னா், மக்கள் தொகை கணக்கெடுப்பாளா் வீட்டிற்கு வரும்போது ஆதாரங்களை வழங்கினால் போதுமானது. இம்மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 7500-க்கும் மேற்பட்டோா் சுய விவரங்களை பதிவு செய்துள்ளனா். மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளம் என்பதால், மாணவா்கள் தங்களது பெற்றோா்கள், உறவினா்கள், நண்பா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், ஆக. 1 முதல் 30 வரை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வீடு தோறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகள் வெற்றிகரமாக நடைபெற மாணவா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியா் மாரிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.