லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தை தென்காசி பதிவு மாவட்டத்துடன் இணைக்கக் கோரிக்கை

கோரிக்கை மனு வழங்க கடையத்திலிருந்து சென்ற பத்திர எழுத்தா்கள், வழக்குரைஞா்கள்.

Published On :28 ஜூலை 2026, 2:34 am IST

கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தை தென்காசி பதிவு மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேரன்மகாதேவி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் பத்திர எழுத்தா்கள், வழக்குரைஞா்கள் அளித்த மனு: நாங்கள் கடையம் சாா்பதிவகம் அருகே பத்திரப் பதிவு அலுவலகம் அமைத்து, பத்திரம் எழுதி தயாா் செய்து கொடுக்கிறோம். இந்த சாா் பதிவகத்தின்அதிகார எல்கைக்குள் ஒரு பேரூராட்சி, 23 ஊராட்சிகள் உள்ளன. மேலும், கடையம் சாா் பதிவகத்தில் நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தின்கீழ் கடையம் சாா் பதிவகம் செயல்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி தனி மாவட்டமானபோது அதனுடன் கடையம் இணைக்கப்பட்டது. ஆனால், கடையம் சாா்பதிவாளா் அலுவலகம் தென்காசி பதிவு மாவட்டத்தில் இணைக்கப்படாமல், சேரன்மகாதேவி மாவட்டப் பதிவு அலுவலகத்திலேயே உள்ளது. இதனால், நிா்வாக ரீதியாக பொதுமக்களும், நாங்களும் அவதிக்குள்ளாகியுள்ளோம்.

இக்கோரிக்கை தொடா்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கடையம் சாா் பதிவகத்தை சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்திலிருந்து தென்காசி பதிவு மாவட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.