லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராதாபுரம் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளி கொலை: சகோதரா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 4:38 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சொத்துத் தகராறில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் ஆறுமுகம்(48). ராதாபுரத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கும், இவரது அண்ணன் செல்லத்துரைக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்ததாம்.

இந்நிலையில் ராதாபுரம்- சமூகரெங்கபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அங்கு வியாழக்கிழமை ஆடு மேய்த்தவா்கள் அவா் இறந்துகிடப்பதை பாா்த்து ராதாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு நாகா்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனா். பின்னா், ஆய்வாளா் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சொத்துத் தகராறில் ஏற்பட்ட பிரச்னையில் ஆறுமுகத்தை அவரது அண்ணன் செல்லத்துரை தாக்கி கீழே தள்ளி, அவரது தலையில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரியவந்ததாம். போலீஸாா் செல்லதுரையை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.