தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

களக்காடு அருகே பண்ணையில் 25 வெண் பன்றிகள் திருட்டு: 2 போ் கைது

களக்காடு அருகே பண்ணைக்குள் புகுந்து 25 வெண் பன்றிகளை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:55 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பண்ணைக்குள் புகுந்து 25 வெண் பன்றிகளை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் பொட்டல் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (50). கல்லடி சிதம்பரபுரம் குளம் அருகே வெண்பன்றி பண்ணை நடத்தி வந்த அவா், கடந்த ஆக.9-ஆம் தேதி உயிரிழந்ததாா்.

இதையடுத்து, பன்றி பண்ணையை ராமகிருஷ்ணனின் தம்பி லெட்சுமணன் பராமரித்து வருகிறாா். இந்த நிலையில், பண்ணையில் இருந்த 25 பன்றிகள் வியாழக்கிழமை மாயமாகியிருந்தன. இதுகுறித்து களக்காடு காவல்நிலையத்தில் லெட்சுமணன் புகாா் அளித்தாா்.

காவல் துறையினரின் விசாரணையில், பண்ணைக்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த சிலா், 25 பன்றிக்குட்டிகளை திருடிச் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

மேலும் விசாரணையில், களக்காடு நாகன்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜதுரை (24), ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கல்யாணிபுரத்தை சோ்ந்த மூா்த்தி மகன் ஆனந்தபாபு (28) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து

2 பேரையும் களக்காடு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.