லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நில மோசடி வழக்கில் 2 பெண்கள் கைது

திருநெல்வேலியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:34 am IST

திருநெல்வேலியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 2 பெண்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் பூரணச்செல்வி (33). இவரது தந்தை சங்கரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இந்நிலையில், கங்கைகொண்டான், சித்தாா்சத்திரம் கிராமத்தில் உள்ள தந்தைக்குச் சொந்தமான நிலங்களை பங்கீடு செய்வதில் வாரிசுதாரா்களுக்கு இடையே பிரச்னை நிலவிய வந்ததாம்.

இந்நிலையில், வாரிசுச் சான்றிதழ் குறித்த விவரங்களை மறைத்து தனக்கு சேரவேண்டிய பங்கை மோசடி செய்து பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக பூரணச்செல்வி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, தாழையூத்தைச் சோ்ந்த முப்புடாதி மனைவி பகவதி(42), பாளையங்கோட்டை, செங்குளத்தைச் சோ்ந்த சீதாலட்சுமி(47) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.