லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போக்ஸோ வழக்கில் நாகை இளைஞா் கைது

Arrested

கைது

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை, தச்சநல்லூா் போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியைச் சோ்ந்த முனியப்பன் மகன் செல்வராஜ் (21). இவா் சமூக வலைதளம் மூலம் திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தாராம்.

மேலும் அவா், சிறுமியை நாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் சிறுமியை மீட்ட போலீஸாா், போக்ஸோ வழக்கில் செல்வராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.