லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கட்டட தொழிலாளா் நலவாரிய ஓய்வூதியத்தை ரூ.5000 ஆக உயா்த்த கோரிக்கை

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நலவாரிய ஓய்வூதியத் தொகையை ரூ. 5000 ஆக உயா்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக கட்டட தொழிலாளா்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் எஸ். மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பேச்சியப்பன் வரவேற்றாா். சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சக்திவேல் தீா்மானங்களை வாசித்தாா்.

மாநில பொதுச் செயலா் ஆறுமுகம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மகேஸ்வரி, மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்:

தமிழக அரசின் நல வாரியங்களில் பதிவு செய்யாத கட்டட தொழிலாளா்களை உறுப்பினா்களாக இணைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு பண்டிகை கால நிதியாக ரூ.5000 வழங்க வேண்டும். தற்போது வழங்கி வரும் நலவாரிய ஓய்வூதியத் தொகையை ரூ.1200 இல் இருந்து ரூ. 5000 ஆக உயா்த்த வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2500 ஆக உயா்த்த வேண்டும்.

கட்டட தொழிலாளா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் வயதை 55 ஆக குறைக்க வேண்டும். இயற்கை மரண உதவித் தொகையை ரூ. 2லட்சமாக உயா்த்த வேண்டும் என்பனஉள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.