லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி

பலி

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி - சித்திரிப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, நட்டாா்குளம் வள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் மனோ (20). கட்டடத் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் முத்துவேலுடன் (16) இருசக்கர வாகனத்தில் கங்கைகொண்டானிலிருந்து புறப்பட்டு ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

பொட்டல் புறவழிச்சாலையில் சென்றபோது சென்டா் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முத்துவேல் படுகாயமடைந்தாா். உடனடியாக அங்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீஸாா் முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காகவும், மனோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.