தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

News image

வருமான வரித்துறை

Updated On :19 ஏப்ரல் 2026, 1:54 am IST

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவில் பணம் மற்றும் நகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருமான வரித் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 25 லட்சம் ரொக்கம், 1,250 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.

விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.